வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (18:30 IST)

காவிரி குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசின் அனுமதி வேண்டும் : தம்பிதுரை சர்ச்சை பேட்டி

தமிழகத்தில் பாயும் காவிரி ஆற்றின் குறுக்கே அணைகள் கட்ட வேண்டுமென்றால் கர்நாடகா அரசிடம் அனுமதி பெற வேண்டும் என கரூர் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை அளித்த பேட்டியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

 
கேரளா மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட அதிகப்படியான உபரிநீர் காவிரியில் வந்து கொண்டிருக்கிறது. மேலும் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்ட நீரும் காவிரியில் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல் அமராவதி ஆற்றில் திறந்து விடப்பட்ட ஒவ்வொரு நீர் காவிரியில் வந்து கொண்டிருக்கிறது.  
 
இவையெல்லாம்  ஒன்றாக சேர்ந்து கரூர் மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் கனஅடி நீருக்கு மேலாக கரூர் அடுத்த திருமுக்கூடலூருக்கு சென்றடைகின்றது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் காவிரி நதி பாயும்  வேலாயுதம்பாளையம், நன்னியூர், தவிட்டுப்பாளையம், வாங்கல், அரங்கநாதன்பேட்டை, திருமுக்கூடலூர் ஆகிய பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கையை கரூர் கலெக்டர் அன்பழகன் நேற்று முன் தினம் விடுத்ததோடு, தண்டோரோ மூலமும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 
 
இந்நிலையில், கரூர் அடுத்த தவிட்டுப்பாளையம், காவிரி கரையோரத்தில் வசிக்கும் பொது மக்களை நேரில் சந்தித்த., மக்களவை துணை சபாநாயகரும், கரூர் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்பித்துரை, அப்பகுதியினை ஆய்வு செய்தார். 
 
அப்போது., செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “காவிரியில் இரண்டு லட்சத்திற்கும் மேலான கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்போடு இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் தமிழக அரசின் சார்பில் செய்யப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார். 
 
தமிழகத்தில் பாயும், காவிரி நதிகளில் அணைகள் கட்ட வேண்டுமென்றால் கர்நாடகா அரசின் ஒப்புதல் பெற வேண்டும். தற்போது பெரும் நீர் உபரிநீர் அல்ல. இந்த நீரை கர்நாடகா அரசு தேக்கினால் அணைகள் உடைத்துக் கொண்டு, நமக்கு (தமிழகம்) தேவையான அளவு எந்த வித தேக்கமும் இல்லாமல் வந்து சேரும் என அவர் தெரிவித்தார்.