திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (17:57 IST)

வெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : அவரின் தாய் மீட்பு

கேரளாவில் நடிகர் ப்ரித்விராஜின் வீடு வெள்ளத்தில் மூழ்கியதால் அவரின் தாய் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

 
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத பெருமழையால் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.  ஆசியாவின் மிகபெரிய அணையாக திகழும் இடுக்கி அணை, வரலாறு காணாத அளவு நிரம்பியது. 26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணையில் நீர் திறந்திவிடப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
முக்கியமாக மலை பகுதிகளான இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.  இந்த வெள்ளத்தால் இதுவரை 73 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
 
இந்நிலையில், கேரளாவில் கொச்சினில் உள்ள நடிகர் ப்ரித்விராஜின் வீடும் நீரில் மூழ்கியது. அந்த வீட்டில் அவரின் தாயும், நடிகையுமான மல்லிகா சுகுமாரன் சிக்கிக் கொண்டார். எனவே, நான்கு பேர் சேர்ந்து அவரை ஒரு பெரிய பாத்திரத்தில் அமரவைத்து மீட்டு வந்தனர். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.