பிபின் ராவத் மறைவு: மூன்று நாள் துக்கம் என முதல்வர் அறிவிப்பு!
முப்படைகளின் தலைமைத் தளபதியான பிபின் ராவத் அவர்கள் நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் காலமான நிலையில் அவரது மறைவை அனுசரிக்கும் வகையில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என உத்தரகாண்ட் மாநில முதல்வர் அறிவித்துள்ளார்
உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் மிங் தமி என்பவர் தனது வீட்டில் பிபின் ராவத் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினார்
அதன்பின் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பாதுகாப்பு படை தளபதி ஜெனரல் பிபின் ராவத் அவர்கள் மறைவிற்கு இந்தியா முழுவதும் இரங்கல் அலை வீசுகிறது
புனித ஆத்மாக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்
இதனை அடுத்து அம்மாநிலம் முழுவதும் அரசு கட்டிடங்களில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் இருக்கும் என்றும் அரசு விழா எதுவும் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.