வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 15 ஏப்ரல் 2020 (22:15 IST)

உத்தரப் பிரதேச மாநில போலீஸார் ரூ.20 கோடி நிதி உதவி !

up police

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக  உபி., மாநில போலீஸார் முதல்வர் நிவாரண நிதிக்காக ரூ.20 கோடி நிதியளித்துள்ளனர்.

சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது.

இந்நிலையில், வரும் மே மாதம் 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில்,  உத்தரப்பிரதேச மாநில போலீஸார் மற்றும் ஆயுதப்படை போலீஸார் அம்மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக ரூ.20 கோடி கொடுத்துள்ளனர்.

இதுசம்பந்தமாக  மாநில காவல்துறை சார்பில் அம்மாநில டி.ஜி.பி., ஓ.பி. சிங் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து ரூ. 20 கோடிக்கான காசோலையை வழங்கினார்.