வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 15 ஏப்ரல் 2020 (19:38 IST)

சென்னை போலீசாருக்கு நடிகர் கிருஷ்ணா செய்த உதவி

சென்னை போலீசாருக்கு நடிகர் கிருஷ்ணா செய்த உதவி
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகிக் கொண்டே வரும் போது கடந்த 2 நாட்களில் மட்டும் தான் 50-க்கும் குறைவானவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது
 
இந்த நிலையில் கொரோனாவுக்கு எதிரான போரில் தமிழக அரசின் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழக காவல்துறையினர் இரவு பகல் பாராது 24 மணி நேரமும் பொதுமக்களை பாதுகாக்கும் நடவடிக்கைல் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து காவல்துறையினர்களின் சேவைக்கு நன்றிகளும், பாராட்டுக்களும் உதவிகளும் குவிந்து வருகிறது
 
இந்த நிலையில் சென்னை காவல்துறையின் சேவைக்கு நன்றி தெரிவித்ததுடன் 24 மணி நேரமும் காவல்துறையில் பணியாற்றுபவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நடிகர் கிருஷ்ணா மாஸ்குகளை அளித்துள்ளனர். இதனை அவர் போலிஸ் உயர் அதிகாரியிடம் அளித்துள்ள நிலையில் போலீஸ் அதிகாரிகள் அனைவரும் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.கொரோனா வைரசுக்கு எதிராக தமிழக மக்களை பாதுகாத்து வரும் காவல்துறையினருக்கு கிருஷ்ணா அளித்துள்ள இந்த உதவி பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது