புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 19 ஜூன் 2025 (10:16 IST)

ஜிமெயில் Unsubscribe பட்டனை கிளிக் செய்தால் எல்லாம் போச்சு: ஹேக்கர்களின் புதிய தந்திரம் - உஷார்!

ஜிமெயில் Unsubscribe பட்டனை கிளிக் செய்தால் எல்லாம் போச்சு: ஹேக்கர்களின் புதிய தந்திரம் - உஷார்!
ஜிமெயில் தேவையற்ற ஸ்பேம் மின்னஞ்சல்களை தடுக்க அறிமுகப்படுத்திய Unsubscribe பட்டன், இப்போது ஹேக்கர்களின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. வெளிப்படையாக பாதிப்பில்லாததாக தோன்றினாலும், இது உங்கள் தனிப்பட்ட தரவை திருடி, உங்கள் சாதனங்களை கட்டுப்படுத்தப் பயன்படும் ஆபத்தான மோசடியாகும்.
 
வழக்கமாக விளம்பர மின்னஞ்சல்களில் உள்ள Unsubscribe பட்டனை பயன்படுத்தி, ஹேக்கர்கள் தீங்கிழைக்கும் மின்னஞ்சல்களை அனுப்புகிறார்கள். இந்த பட்டனை கிளிக் செய்யும்போது, நீங்கள் ஒரு போலியான வலைப்பக்கத்திற்கு அனுப்பப்படுவீர்கள். இதன் மூலம், மால்வேர் அல்லது வைரஸ் உங்கள் கணினியில் பதிவிறக்கப்பட்டு, உங்கள் மின்னஞ்சல் முகவரி நீக்கப்படுவதற்கு பதிலாக, உங்கள் தரவுகள் திருடப்படுகின்றன. 
 
இந்த பிரச்சனையில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி? இந்த Unsubscribe மோசடிகளிலிருந்து தப்பிக்க சில எளிய விதிகளைப் பின்பற்ற வேண்டும்:
 
1. அடையாளம் தெரியாத அனுப்பியவர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களில் உள்ள Unsubscribeபட்டனை ஒருபோதும் கிளிக் செய்யாதீர்கள்.
 
2. மின்னஞ்சலின் தலைப்பில் Urgent அல்லது "இறுதி அறிவிப்பு"  என இருந்தால், அந்த மின்னஞ்சல்களை திறக்க வேண்டாம்.
 
3. Unsubscribe பட்டன் மின்னஞ்சல் விவரங்களுக்கு அடுத்ததாக, மேல்பகுதியில் இல்லையெனில், அதை கிளிக் செய்யாதீர்கள்.
 
4. எந்த இணைப்பையும் கிளிக் செய்வதற்கு முன், மின்னஞ்சலின் உள்ளடக்கத்தை முழுமையாக படிக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள்.
 
5. மின்னஞ்சல் மோசடிகள் ஒரு பெரும் அச்சுறுத்தல். எனவே, உங்கள் இன்பாக்ஸில் வரும் மின்னஞ்சல்களில் மிகுந்த கவனத்துடன் செயல்படுங்கள்.
 
Edited by Mahendran