வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : புதன், 15 ஏப்ரல் 2020 (20:27 IST)

IAS, IPS, IFS, IRS உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிக்கான தேர்வுகள் எப்போது ? UPSC அறிவிப்பு

சீனாவில் இருந்து பலவேறு உலகநாடுகளுக்குப் பரவிவரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தீவிரமாக பரவிவருகிறது.

இந்நிலையில், வரும் மே 3 ஆம் தேதிவரை  நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள காரணத்தால் 10 ஆம் வகுப்பு, 12 ஆம்வகுப்பு பொதுத்தேர்வுகள் முதல்கொண்டு மத்தியப் பணியாளர் தேர்வுகள் வரை அனைத்தும் எப்போது நடக்கும் என்ற கேள்விகள் எழுந்துவந்தன்நிலையில், இன்று யுபிஎஸ்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், வரும் மே 3ஆம் தேதிக்கு முன்பாக நடைபெற இருந்த தேர்வுகள் ஜூன் மாதம் நடைபெறும் என யு.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

மே 3-ம் தேதிக்குப் பிறகு திட்டமிட்டபடி அனைத்து தேர்வுகளும் நடைபெறும் எனவும், மே 31ஆம் தேதி IAS, IPS, IFS, IRS உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல் கட்டத்தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது.