வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 15 ஏப்ரல் 2020 (21:50 IST)

பெண்ணின் நுரையீரலில் 14 ஆண்டுகளாக இருந்த கோழித்துண்டு !!!

சீனாவில் ஒரு பெண்ணின் நுரையீரலில் சிக்கியிருந்த ஒரு கோழி எலும்பினை சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் நீக்கியுள்ளனர்.

சீனா தேசத்தைச் சேர்ந்தவர் ஒரு இளம்பெண் ( 22 வயது ). இவர், சில ஆண்டுகளாகத் தொடர் சிகிச்சையால்   அவதிப்பட்டு வந்தார்.

இதுகுறித்து அவர் மருத்துவமனைக்குக் சென்று  மருத்துவரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள்  அப்பெண்ணில் நுரையீரலில் ஒரு கோழியின் எலும்புத்துண்டு இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

அதன்பிறகு அறுவைச் சிகிச்சை செய்து அந்த எலும்பை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.
அந்தப் பெண் 8 வயதில் ஒரு எலும்பை முழுங்கியதாகவும், அது அவரது நுரையீரலில் சிக்கி அவருக்கு சுவாசப் பாதையில் பிரச்சனை ஏற்படுத்தியாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.