செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 9 மார்ச் 2021 (10:18 IST)

ரெண்டு ரெண்டு பேரா போய் சோலிய முடிங்க! – உ.பியில் விநோத கழிவறையால் மக்கள் அதிர்ச்சி!

உத்தர பிரதேசத்தில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறையில் ஒரே அறைக்குள் இரு கழிப்பிடங்கள் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நாடு முழுவதும் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் தனி கழிப்பறையும், தெருக்களுக்கு பொது கழிப்பறையும் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. சில இடங்களில் இந்த திட்டத்தை நிர்வகிக்கும் அதிகாரிகள் கமிஷன் அடிக்க நினைப்பதால் முழுமையாக கழிவறை கட்டப்படுவதில்லை என மக்கள் புகாரும் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் உத்தர பிரதேசத்தின் பாஸ்தி மாவட்டத்தில் அதிகாரிகள் கட்டித்தந்துள்ள கழிப்பறையை கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பொது கழிப்பறையாக கட்டப்பட்ட அதில் ஒரே அறைக்குள் இரண்டு கழிப்பிடங்கள் அருகருகே வைக்கப்பட்டுள்ளது. இதில் எப்படி ஒரே நேரத்தில் இருவர் செல்ல முடியும் என மக்கள் குழம்பியுள்ள நிலையில், சிறுவர்களின் உபயோகத்திற்காக அப்படி கட்டப்பட்டதாக அதிகாரிகள் சமாளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.