பாலின வேறுபாடுகள் களைவதற்கு பாடுபடுவோம் - ராம்நாத் கோவிந்த் மகளிர் தின வாழ்த்து!
ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் மகளிர் தினத்திற்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கு வாழ்த்து கூறிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வரும் இந்திய பெண்களுக்கு வாழ்த்து கூறி பாலின வேறுபாடுகள் மற்றும் சமத்துவமின்மையை களைவதற்கு தொடர்ந்து பாடுபடுவோம் என உறுதியளித்தார்.