செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 8 மார்ச் 2021 (10:14 IST)

இன்று மகளிர் தினம்.. அதுனால பெண்களுக்கு மட்டும் ஹாலிடே! – தெலுங்கானா அரசு அறிவிப்பு!

இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில் பெண்களுக்கு மட்டும் தெலுங்கானாவில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் மகளிர் தினத்திற்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு சமமாக பெண்களும் சாதனை புரிந்து வருவதாகவும், மக்கள் தொகையில் 50 சதவீதம் உள்ள பெண்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டால் மேலும் பல சாதனைகள் நிகழ்த்துவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மகளிர் தினத்தையொட்டி இன்று தெலுங்கானா முழுவதும் அரசு அலுவலகங்களில் பெண்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.