வெள்ளி, 21 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 21 பிப்ரவரி 2025 (09:36 IST)

அடுத்த மாதம் முதல் மகளிர் உரிமை தொகை ரூ.2500.. டெல்லி முதல்வர் ரேகா குப்தா..!

டெல்லி முதலமைச்சராக நேற்று பதவி ஏற்றுக் கொண்ட ரேகா குப்தா, அடுத்த மாதம் 8ஆம் தேதி முதல், அதாவது மகளிர் தினத்திலிருந்து, டெல்லியில் உள்ள அனைத்து மகளிர்களுக்கும் மாதம் ரூபாய் 2500 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில், பாஜக அபார வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சி பிடித்தது. அதன் பின்னர், அக்கட்சியின் ரேகா குப்தா முதலமைச்சராக பதவியேற்றார். மேலும், சில அமைச்சர்களும் பதவி ஏற்றுள்ளனர்.

பதவி ஏற்ற பின்னர், அவர் பாபா கோவிலுக்கு சென்று வழிபட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பெண்களுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும்" என்ற தேர்தல் வாக்குறுதியை முதல் வாக்குறுதியாக நிறைவேற்றுவதாக அறிவித்தார். முதல் தவணை தொகை மார்ச் 8ஆம் தேதி, மகளிர் தினத்தன்று, பெண்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

"எங்களது 48 எம்எல்ஏக்களும் பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நிறைவேற்ற பாடுபடுவோம். பெண்கள் உதவித்தொகை மட்டுமின்றி, நாங்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயமாக நிறைவேற்றுவோம்" என்று முதலமைச்சர் உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து, மார்ச் 8ஆம் தேதிக்குள் தங்கள் வங்கி கணக்குகளில் ரூ.2500 வரவு வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் டெல்லி மகளிர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva