1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 8 ஜூன் 2022 (17:28 IST)

உபி டுவின் டவர் முழுமையாக இடிக்கப்படும்: அதிரடி அறிவிப்பு!

twin tower
உபி டுவின் டவர் முழுமையாக இடிக்கப்படும்: அதிரடி அறிவிப்பு!
உத்தரபிரதேச மாநிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட இரட்டை அடுக்கு மாடி குடியிருப்பு முழுமையாக இடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நொய்டா என்ற பகுதியில் 40 மாடிகளைக் கொண்ட இரண்டு குடியிருப்புகள் கட்டப்பட்டு இருந்தது.இது குறித்து வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் கட்டடங்களை முழுமையாக இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
 
ஆனால் இந்த கட்டடத்தை ஒரே நேரத்தில் இடிக்க முடியாது என்பதால் படிப்படியாக எடுக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த கட்டிடம் முழுவதையும் இம்மாதம் 22ஆம் தேதிக்குள் இடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
 
ஆனால் மூன்று மாத காலம் அவகாசம் வேண்டும் என கட்டட நிர்வாகம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தற்போது ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்குள் இடிக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது