1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 1 ஜூன் 2022 (18:23 IST)

தமிழக சுகாதாரத்துறை அமைச்சருக்கு உபி அமைச்சர் கண்டனம்!

subramanian
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் பேசிய கருத்துக்கு உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
 
சமீபத்தில் பேட்டியளித்த மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் வடமாநிலத்தில் இருந்து வந்த மாணவர்களால் தான் தமிழகத்தில் கொரோனா பரவியது என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளார் 
 
இதற்கு உத்தர பிரதேச மாநில அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கொரோனாவுக்கு மாநில எல்லைகளை தெரியாது என்றும் தமிழக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ள கருத்து மிகவும் பொறுப்பற்ற கருத்து என்றும், வட இந்தியர்களை இழிவுபடுத்தும் விதமாக அவரது கருத்து உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்