1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 6 ஜூலை 2020 (08:48 IST)

இரண்டாவது அலையாக வரும் வெட்டுக்கிளிகள்..! – ஐ.நா எச்சரிக்கை!

இந்தியாவின் வட மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து பெரும் சேதத்தை உருவாக்கியுள்ள நிலையில் இரண்டாவது அலையாக மீண்டும் ஏகப்பட்ட வெட்டுக்கிளிகள் வர இருப்பதாக ஐ.நா சபை எச்சரித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தாக்கத்தால் முடங்கி கிடப்பதால் பொருளாதாரம் பின்னடைவை சந்தித்தது. தளர்வுகள் அளிக்கப்பட்டு விவசாயிகள் தங்கள் பணிகளை தொடர்ந்தபோது அதற்கும் வில்லங்கம் செய்ய வந்தன பாலைவன வெட்டுக்கிளிகள். பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் புகுந்த வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், ஹரியானா என வேகமாக பரவி சென்றன. இதனால் அம்மாநில விவசாயிகள் பலரும் பெரும் பாதிப்பை அடைந்துள்ளனர்.

வெட்டுக்கிளிகளை ஒழிக்க ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் பூச்சி மருந்து தெளித்தல் போன்ற செயல்பாடுகளில் அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் ஐ.நா சபையின் உணவு வேளாண் அமைப்பு புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி ராஜஸ்தான் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு பிரிந்து சென்ற வெட்டுக்கிளிகள் மீண்டும் ராஜஸ்தான் திரும்ப உள்ளதாகவும், அதே சமயம் பாகிஸ்தான் வழியாக புதிய வெட்டுக்கிளிகள் படை இந்தியாவிற்குள் நுழைய உள்ளதாகவும் எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது.