ஜூன் 2021 வரை இலவச ரேஷன் பொருட்கள் – தமிழக அரசு நிலைபாடு என்ன?
கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படவேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வேலை வாய்ப்புகளை இழந்து பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் நவம்பர் மாதம் வரை அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை பொருட்களை விலையில்லாமல் கொடுக்க முன்வந்துள்ளார்.
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்திலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை விலையில்லாமல் பொருட்கள் கொடுக்கவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது ஜூலை மாதம் விலையிலலாமல் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.