ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: செவ்வாய், 26 நவம்பர் 2019 (18:51 IST)

மீண்டும் திறக்கப்பட உள்ள ’நோக்கியா ஆலை’ : ’10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு’ !

சில வருடங்களுக்கு முன் உலக அளவில் செல்போன் விற்பனையில் கொடிகட்டிப் பறந்த  நோக்கியா செல்போன் கம்பெனி, இன்றைக்கு பல முன்னணி செல்போன் கம்பெனிகளுக்கு சவால் விட்டு  போராடி வருகிறது. இந்நிலையில் சென்னையில் பிரசித்து பெற்ற ’’நோக்கியா ஆலை’’ மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
கடந்த 2006 ஆம் ஆண்டு, சென்னையில் இயங்கி வந்த நோக்கியா ஆலைக்கு, அப்போதைய தமிழக ஆளும் கட்சி தரப்பில் பெரும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.
 
இந்நிலையில், நீதிமன்றத்துக்கு நோக்கியா சென்றது. இதில் 10 ஆயிரம் பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. இந்த ஆலையைத் திறக்கப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
 
இந்நிலையில், மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இதுகுறித்து கூறியதாவது :
 
ஆப்பிள் நிறுவனத்துக்கு முக்கியமான பாகங்களை விநியோகம் செய்யும் பின்லாந்து நட்டைச் சேர்ந்த சால் காம்ப் நிறுவனம், ரூ. 215 கோடிக்கும், இந்த நிறுவனம் பேசியுள்ளதாகவும்  விரைவில் தனது உற்பத்தியை இந்த நிறுவனம் ,தொடங்கவுள்ளதாகவும் இதன் மூலமாக 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளார்.