திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 28 அக்டோபர் 2019 (15:43 IST)

ஐஃபோன் 11 ப்ரோவுடன் வெளிவருகிறது ஏர்பாட்ஸ் ப்ரோ..

ஐஃபோன் 11 ப்ரோ மாடல் வெளியாகவுள்ள நிலையில் அதனுடன் ஏர்பாட்ஸ் ப்ரோவும் வெளிவரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் வயர்லெஸ் தனது மொபைல்களில் வயர்லெஸ் இயர்ஃபோனை அறிமுகம் செய்து வந்தது. அந்நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஆப்பிள் ஐஃபோன் 7 மாடலில், ஹெட்ஃபோன் ஜாக்கை நீக்கியது.

இந்நிலையில் ஏர்பாட்ஸ் மாடலின் ஏர்பாட்ஸ் ப்ரோ அப்டேட் வெர்ஷனை வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாடல் ஐஃபோன் 11-வுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏர்பாட்ஸ் 8 வண்ணங்களில் கிடைக்கும் என கூறப்பட்ட தகவல் வதந்தி என நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன் படி, ஐஃபோன் 11 ப்ரோ மற்றும் ஐஃபோன் 11 ப்ரோ மேக்ஸ் நான்கு நிறங்களில் கிடைக்கிறது. அதன் படி ஏர்பாட்ஸ் ப்ரொவும் வைட், கோல்டு, பிளாக், மிட்நைட் கிரீன் ஆகிய நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

இந்த ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலின் விலை 200 டாலர் முதல் 300 டாலர்கள் வரை, அதாவது இந்திய மதிப்புபடி ரூ.14,167 முதல் ரூ.21,250 வரை நிர்ணயிக்கப்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஏர்பாட் வாருகிற 2020 ஆம் வருடம் வெளிவரலாம் என கூறப்படுகிறது.