திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: சனி, 26 அக்டோபர் 2019 (13:15 IST)

இருபுறங்களிலும் மடியும் அசத்தல் ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்..

டி.சி.எல்.நிறுவனம் இரு புறங்களிலும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்ஃபோன்கள் அறிமுகமாகியுள்ளன.

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்ஃபோன்களை ஹுவாய், சியாமி, மொடோரோலா, மைக்ரோசாஃப்ட், ஆகிய நிறுவனங்கள் தயாரிக்க முயற்சி செய்து வரும் நிலையில் சீனாவின் பிரபலமான டி.சி.எல். நிறுவனம் இருபுறங்களிலும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்ஃபோனை காட்சிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்ஃபோனின் வடிவமைப்பில் இரண்டு இடங்களில் மடிக்கக்கூடிய வகையில் உறுவாக்கியுள்ளனர். இந்த ஸ்மார்ட்ஃபோனுக்கு இரு ஹிங்குகளும், இரு மடிப்புகளும் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஹிங்க்குகளுக்கு டிராகன் ஹிங்க் என்றும், பட்டர்ஃப்ளை ஹிங்கு என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த இரு ஹிங்குகளும் தான் இந்த ஸ்மார்ட்ஃபோனை மடிப்பதற்கு உதவுகின்றன.

இந்த ஸ்மார்ட்ஃபோன் இரு இடங்களிலும் மடிக்கக்கூடியதாக உருவாக்கியுள்ளனர். ஸ்மார்ட்ஃபோன் முழுமையாக திறக்கப்பட்டால், டேப்லட் போன்று பெரிய திரை காணப்படுகிறது. எனினும் இந்த ஸ்மார்ட்ஃபோனுக்கு டி.சி.எல். நிறுவனம் இதுவரை எந்த பெயரையும் வைக்கவில்லை. மேலும் இதன் சிறப்பம்சங்கள் குறித்தும் வெளியீடு தேதி குறித்தும் எந்த தகவலையும் அந்நிறுவனம் அளிக்கவில்லை.