வேறொரு ஆணுடன் ரகசிய காதல்; மனைவிக்கு கணவன் கொடுத்த நூதன தண்டனை!
மத்தியபிரதேசத்தில் வேறொரு ஆணுடன் தொடர்பில் இருந்து மனைவிக்கு கணவன் அளித்த தண்டனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் டிவாஸ் மாவட்டத்தில் உள்ள பொர்படவ் என்ற கிராமத்தில் மங்கிலால் என்பவர் அவரது மனைவியுடன் வாழ்ந்து வந்துள்ளார். மங்கிலாலின் மனைவி அதே பகுதியை சேர்ந்த வேறொரு நபருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
இதையறிந்த மங்கிலால் மற்றும் பெண்ணின் உறவினர்கள் அந்த பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளனர். அவரது உடைகளை கலைந்து அவமானம் செய்ததுடன், மங்கிலாலை அவரது மேல் ஏற்றி ஊர் முழுவதும் தோளில் சுமந்தபடி நடக்க வைத்துள்ளனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் மங்கிலால் உள்பட 11 பேரை கைது செய்துள்ளனர்.