1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 1 பிப்ரவரி 2023 (15:37 IST)

மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் 2023! முழு விவரம் இங்கே!

Budjet 2023
Union Budget 2023 Live: மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் நேரலை!










3 லட்சம் வரை வருமானவரி இல்லை. 3 – 6 லட்சம் வருமானத்திற்கு 5% வரி

6 – 9 லட்சத்திற்கு 10% வரி, 9 – 12 லட்சத்திற்கு 15% வரி, 12 – 15 லட்சத்திற்கு 20% வரி, 15 லட்சத்திற்கு மேல் வருமானத்திற்கு 30% வரி

தனிநபருக்கான உச்சபட்ச வரி இதுவரை 42 சதவீதமாக இருந்த நிலையில் அது 40 சதவீதமாக குறைக்கப்படும்

வருமான வரி ஸ்லாப் அடுக்குகள் 7 லிருந்து 5 ஆக குறைக்கப்படும்.

ஸ்டார்ட் அப்களில் வருமான வரி சலுகை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்படுகின்றன.


புதிய வரி நடைமுறையில் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை பெறும் வருமானத்திற்கு வருமானவரி கிடையாது

வரிமானவரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

2025-26 நிதியாண்டுக்குள், நிதி பற்றாக்குறை விகிதத்ததை 4.5%-க்கும் கீழ் குறைப்பதே அரசின் நோக்கம்

நடப்பு நிதியாண்டின் திருத்தப்பட்ட நிதி பற்றாக்குறை, வளர்ச்சியில் 6.4% ஆக இருக்கும் என கணிப்பு!

வருமான வரித்தாக்கலுக்கான படிவம் எளிமையாக்கி புதுப்பிக்கப்படும் - நிதியமைச்சர் அறிவிப்பு

ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட வைரம் மீதான சுங்க வரி குறைப்பு

தங்கம், வெள்ளி, ப்ளாட்டினம் பொருட்களுக்கு இறக்குமதி வரி அதிகரிக்கப்படுகிறது

நடப்பு நிதியாண்டில் 6.5 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். கூடுதலாக பெறப்பட்ட வருமானவரி இனி 16 நாட்களுக்கு திருப்பி அளிக்கப்படும்.

சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு 16% கூடுதல் வரி விதிக்கப்படும்

7.5% வட்டியில் பெண்களுக்கான சிறப்பு சிறுசேமிப்பு திட்டம் தொடங்கப்படும்.

இறால் உணவு உற்பத்திக்கு தேவையான பொருள்களுக்கான இறக்குமதி வரியில் சலுகை

செல்போன் தயாரிப்பை ஊக்குவிக்க அதன் உற்பத்தி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைப்பு

கிச்சன் சிம்னிக்கான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு

கேமரா லென்ஸ், தொலைக்காட்சி உள்ளிட்ட பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும்

லித்தியம் பேட்டரி தயாரிப்பு உபகரணங்களுக்கான இறக்குமதி வரி குறைப்பு தொடரும்.

வரும் நிதியாண்டில் ரூ.12.31 லட்சம் கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது


அஞ்சலகத்தில் முதியோருக்கான வைப்பு நிதி வரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்வு

ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை வரம்பு ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ.9 லட்சமாக உயர்வு

ஜாயிண்ட் கணக்கு வாடிக்கையாளர்கள் ரூ.15 லட்சம் வரை பரிவர்த்தனை செய்ய அனுமதி

தேக்னா அப்னா தேஷ் என்ற புதிய திட்டம் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக கொண்டு வரப்படுகிறது.

சிறுகுறு தொழில்களுக்கு கடன் தர ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு மற்றும் வட்டியில் 1 சதவீதம் குறைக்கப்படுகிறது.

50 சுற்றுலா தளங்களை கொண்ட சுற்றுலா பேக்கேஜ் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

இளைஞர்கள் உலகளாவிய வேலைகளை பெற உதவும் வகையில் நாடு முழுவதும் 30 உதவி மையங்கள் அமைக்கப்படும்.


சுற்றுலாத்துறை ஊக்குவிக்க தனி செயலி உருவாக்கப்படும் என அறிவிப்பு

நாட்டில் புதிதாக 10 ஆயிரம் உயிரி ஆராய்ச்சி மையங்கள் ஏற்படுத்தப்படும்.

அடுத்த 3 ஆடுகளில் 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்படும்.

மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை அகற்றும் திட்டத்திற்கு மத்திய, மாநில அரசு உதவியுடன் கூடுதல் நிதி ஒதுக்கீடு.


100 நாள் வேலைவாய்ப்பு பணியாளர்களை கொண்டு அலயாத்தி காடுகளை பாதுகாக்கவும், அதன் அளவை அதிகரிக்கவும் புதிய திட்டம்.

தேசிய பசுமை ஹைட்ரஜன் மிஷன் திட்டத்திற்காக ரூ.19,700 கோடி ஒதுக்கீடு.

அரசு ஊழியர்கள் தங்கள் திறனை ஆன்லைன் மூலம் வளர்த்துக் கொள்ள “கர்மயோகி” திட்டம் அறிமுகம்

ரசாயன உர பயன்பாட்டை குறைக்கவும், இயற்கை உர பயன்பாட்டை அதிகரிக்கவும் “கோவர்த்தன்” திட்டம் அறிமுகம்

நாட்டில் 5ஜி சேவை மேம்பாட்டிற்காக 100 ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளது.

சுற்றுசூழலை பாதிக்காத பசுமை எரிசக்தி முறைக்கு மாற ரூ.35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு

நாடு முழுவதும் 3 செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) ஆய்வு மையம் உருவாக்கப்படும்

சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு தனி டிஜிலாக்கர் முறை உருவாக்கப்படும்.

போக்குவரத்து திட்டங்களை நிறைவேற்ற ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு

நொடிந்து போகும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு புத்துயிர் அளிக்க தனி நிதி உருவாக்கப்படும்.

அனைத்து அரசு சேவைகளுக்கும் பான் எண் அடையாளமாக பயன்படுத்தப்படும்.

ஆதார், பான், டிஜிலாக்கர் போன்றவை தனிநபர் அடையாள உறுதிபடுத்தலுக்கு பிரபலமாக்கப்படும்

உடல்நலத்திற்கு அவசியமான தானியங்களின் உற்பத்தியில் அரசு அக்கறை கொண்டுள்ளது.

தோட்டக்கலை துறை வளர்ச்சிக்காக ரூ.2200 கோடி நிதி ஒதுக்கீடு

நாடு முழுவதும் உள்நாட்டு பயணங்களுக்காக புதிதாக 50 விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்படும்

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மனிதர்களுக்கு பதிலாக 100 சதவீதம் இயந்திரங்கள் மூலமாக கழிவுகளை அகற்றும் முறை அமல்படுத்தப்படும்

வறட்சி, குடிநீர் வசதி, விவசாயிகளுக்காக கர்நாடகாவுக்கு ரூ.5300 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு

ரயில்வே துறைக்கு ரூ2.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

ஏகலைவா பள்ளிகளில் புதிதாக 38,800 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்

மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் வட்டியில்லா கடன் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படும்

நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு தரவு தளம் அமைக்கப்படும். அனைத்து கிராமங்களிலும் கூட்டுறவு சங்கம் அமைக்கப்படும்.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.79 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

பழங்குடியினர் மேம்பாட்டிற்கு 3 ஆண்டுகளில் ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்

மீனவர்கள் நலனுக்காக ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

வேளாண் துறைக்கு கடன் வழங்குவதற்கான இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள மருத்துவ கல்லூரிகளுடன் புதிதாக 157 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும்

சிறுவர்கள், பெரியோர்களுக்காக டிஜிட்டல் நவீன நூலகங்கள் அமைக்கப்படும்


உலக நாடுகளுக்கு இணையான ஆராய்ச்சிகளில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது

விவசாய விளைபொருட்களை சேமிக்க பரவலாக சேமிப்பு மையங்கள் அமைக்கப்படும்.

7 முக்கிய அம்சங்கள் கொண்டதாக இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

விவசாய வளர்ச்சியை அதிகரிக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதி அமைக்கப்படும்

அனைவருக்கும் அனைத்தும் என்பதை நோக்கமாக கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது

நாடு முழுவதும் 9.6 கோடி புதிய கேஸ் சிலிண்டர் இணைப்புகள் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன

நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருக்கும். உலக நாடுகளால் அடைய முடியாத சதவீதம் இது – நிர்மலா சீதாராமன்

11.4 கோடி விவசாயிகள் பிரதமரின் கிசான் நிதியுதவி மூலம் பயனடைந்துள்ளனர்.

டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது.

பிரதமரின் காப்பீட்டு திட்டத்தால் இந்தியாவில் 44 கோடி பேர் பயனடைந்துள்ளனர்

கொரோனா காலத்தில் மக்களுக்கு இலவச தானியங்கள் வழங்கப்பட்டன

சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த கால பட்ஜெட் அடித்தளங்களின் மீது கட்டமைக்கப்பட்ட பட்ஜெட்டாக இது இருக்கும் – நிர்மலா சீதாராமன்

உலக பொருளாதாரத்தில் இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலக நாடுகள் பாராட்டும் வகையில் இந்திய பொருளாதாரம் உயர்ந்துள்ளது – நிர்மலா சீதாராமன்

இந்த பட்ஜெட் ஏழை மக்கள், பழங்குடிகள், நடுத்தர மக்கள் என அனைவருக்குமான பட்ஜெட் – நிர்மலா சீதாராமன்

நிதியமைச்சராக தொடர்ந்து 5வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

இன்று தாக்கல் செய்யப்படும் இந்த பட்ஜெட் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் பட்ஜெட்டாக இருக்கும் என மத்திய அமைச்சர் பிரால்ஹத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்பாக அதன் விவரங்களை அமைச்சரவை கூட்டத்தில் பகிர்ந்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் ஆட்சிக்காலத்தின் கடைசி பட்ஜெட் என்பதால் அறிவிப்புகள் குறித்த பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

பட்ஜெட் தாக்கல் செய்ய சில நிமிடங்களே உள்ள நிலையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 12 பைசா அதிகரித்து ஒரு டாலர் 81.76 ரூபாயாக உயர்ந்துள்ளது.

பட்ஜெட் இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது.

பட்ஜெட் கூட்டத்திற்கு செல்லும் முன்னர் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து பேசினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பட்ஜெட் தாக்கலுக்கு கைத்தறியில் நெய்யப்பட்ட சிவப்பு புடவையை அணிந்து வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்