வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 18 ஜூலை 2022 (08:44 IST)

பாக்கெட் உணவுப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி அதிகரிப்பு! – இன்று முதல் அமல்!

GST
கடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் முடிவு செய்தபடி இன்று முதல் பாக்கெட் உணவு பொருட்கள், மருத்துவமனை அறை வாடகை உள்ளிட்டவற்றிற்கு ஜிஎஸ்டி வரி அதிகரிக்கப்படுகிறது.

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) அமலுக்கு வந்தது முதலாக பல்வேறு பொருட்களுக்கும் குறிப்பிட்ட அளவிலான ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று முதல் சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரிவிகிதம் உயர்த்தப்படுகிறது.

பாக்கெட்டில் அடைக்கப்பட்டு, லேபிள் ஒட்டி விற்கப்படும் உலர்ந்த காய்கறிகள், பழங்கள், பனீர், தேன், கோதுமை, பிற தானியங்கள், மீன், இறைச்சி, தயிர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர பேப்பர், ஷார்ப்னர், ஸ்கிம்மர், கரண்டி, எல்.இ.டி விளக்குகள், வரையும் கருவிகள் போன்றவற்றிற்கு ஜிஎஸ்டி 12%ல் இருந்து 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் உலக வரைப்படங்கள், உலக உருண்டை, சுவர் வரைப்படங்கள், நிலபரப்பு படங்கள் உள்ளிட்டவற்றிற்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி.

வங்கி காசோலைகளுக்கு 18% ஜிஎஸ்டியும், வாட்டர் ஹீட்டர்களுக்கு 12 சதவீதமும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் ஐசியு தவிர ரூ.5 ஆயிரத்திற்கு மேல் வசூலிக்கும் சிகிச்சை அறைகளுக்கு 5 சதவீதமும், மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு வசதிகளுக்கு 12 சதவீதமும் ஜிஎஸ்டி விதிக்கபட்டுள்ளது. ரூ.1000க்கு மேல் உள்ள ஓட்டல் வாடகை அறைகளுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்புகள் மற்றும் வரி உயர்வுகள் இன்று முதல் அமலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.