செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 10 நவம்பர் 2022 (19:12 IST)

காதலி துரோகம்: ஃபேஸ்புக் நேரலையில் இளைஞர் தற்கொலை

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர்  காதலி செய்த துரோகத்தால் ஃபேஸ்புக்கில் வீடியோ எடுக்கும்போது, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மகாராஜா கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், ஒரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார், இருவரும் நெருங்கிப் பழகிய  நிலையில், அப்பெண்ணுக்கு வீட்டில் திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்து வந்ததாகவும், இதற்கு அவரது காதலி சம்மதம் கூறியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், மனமுடைந்த அந்த நபர், இன்று ஃபேஸ்புக்கில் நேரலையில் வந்து,  அவரது காதலி மற்றும் அவரது குடும்பத்தின் பெயரைக் கூறியபடி தற்கொலை செய்துகொண்டார்.

இதைப் பார்த்த நெட்டிசன் கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, தகவல் அறிந்த போலீஸார், இளைஞரின் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து, விசாரித்து வருகின்றனர்.

Edited by Sinoj