செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 21 பிப்ரவரி 2022 (11:04 IST)

இனி பட்டப்படிப்புகளை ஆன்லைனில் படிக்கலாம்! – யூஜிசி அனுமதி!

கொரோனா காலத்தில் இருந்தது போல பட்டப்படிப்புகளை ஆன்லைனிலேயே படிக்கலாம் என்றும், அவை நேரடி படிப்புக்கு நிகராகவே கருதப்படும் என்றும் யூஜிசி தெரிவித்துள்ளது.

கொரோனா காரணமாக பல்கலைகழகங்கள், தன்னாட்சி கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் வழியாக பாடம் நடத்தி வந்தன. இந்நிலையில் தற்போது கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் பல்கலைகழகங்களுக்கு யூஜிசி விதிமுறைப்படி ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுமதி உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் உள்ள 900 தன்னாட்சி பெற்ற கல்லூரிகளிலும் ஆன்லைன் வகுப்பை அனுமதிக்க யூஜிசி முடிவு செய்துள்ளது. நேரடியாக கல்லூரிகளில் படிப்பவர்கள் போலவே ஆன்லைன் மூலம் படித்து பட்டம் பெறுபவர்களும் கருதப்படுவார்கள் என யூஜிசி தெரிவித்துள்ளது.