திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 21 பிப்ரவரி 2022 (06:29 IST)

3வது டி20 போட்டியிலும் இந்தியா வெற்றி: ஆட்டநாயகன், தொடர் நாயகன் சூர்யகுமார் யாதவ்

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மிக அபாரமாக வெற்றி பெற்றதை அடுத்து மேற்கு இந்திய தீவுகள் அணி ஒயிட்வாஷ் ஆனது.
 
 நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் அடித்தது. சூர்யகுமார் யாதவ் மிக அபாரமாக விளையாடி 65 ரன்கள் அடித்தார்
 
இதனை அடுத்து 185 என்ற இலக்கை நோக்கி விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையான வெற்றியைப் பெற்றது என்பது குறிப்பிட்டத்தக்கது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் இளம் வீரர் சூர்யகுமார் யாதவ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது