1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 21 பிப்ரவரி 2022 (08:23 IST)

தோனி காலத்துக்கு பிறகு இப்போதான் முதலிடம்! – இந்தியா படைத்த சாதனை!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இந்தியா விளையாடி வந்தது. நடந்து முடிந்த டி20 தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை ஒயிட் வாஷ் செய்து வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் ஐசிசி வெளியிட்டுள்ள டி20 தரவரிசை பட்டியலில் இந்தியா 269 ரேட்டிங்க் புள்ளிகள் பெற்று இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி தரவரிசையில் முதல் இடம் பிடித்துள்ளது. 2016ல் தோனி தலைமையிலான இந்திய அணி தரவரிசையில் முதலிடம் பிடித்தது. தற்போது 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்திய அணி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.