1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. two students get 720 marks in neet exam

நீட் தேர்வில் மூன்று மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள்!

நீட் தேர்வு
மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வில் நீட் தேர்வு முடிவு நேற்று வெளியான நிலையில் இந்த தேர்வில் 3 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தைப் பகிர்ந்துள்ளனர் 
 
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மிருணாள் குட்டேரி, டெல்லியை சேர்ந்த தன்மய், மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கார்த்திகா நாயர் ஆகிய மூவரும் முழு மதிப்பெண்களை பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழகத்தைப் பொருத்தவரை நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கீதாஞ்சலி என்ற மாணவி 710 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார் என்பதும் சேலத்தை சேர்ந்த அர்ச்சிதா என்ற மாணவி 705 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்
 
தமிழகத்தை சேர்ந்த கீதாஞ்சலி இந்திய அளவில் இருபத்தி மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, நேற்று வெளியான நீட் தேர்வு முடிவுகள் மாணவர்கள் மின்னஞ்சல் முகவரிக்கு மதிப்பெண்கள் அனுப்பப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
சென்னைக்கும் பள்ளிகள் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!