செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 31 டிசம்பர் 2022 (23:54 IST)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரண்டு நாட்கள் இலவச தரிசன டிக்கெட் ரத்து

tirupathi
திருப்பதி ஏழுமலையான் கோவில் இலவச தரிசன டிக்கெட் இன்றும் நாளையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச சுவாமி தரிசனம் செய்வதற்காக , தேவஸ்தானம் வழங்கி வந்த இலவச டோக்கன் இன்று மற்றும் நாளை ஆகிய ரெண்டு நாட்கள் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

அதன்பின், ஜனவரி 2 ஆம் தேதி மீண்டும் இலவச டிக்கெட்   ஒரு நாளைக்கு 45 ஆயிரம் வழங்கப்படும் என்றும், 10 நட்களுக்கு 4.50 லட்சம் டிக்கெட்டுகள் வழங்கப்படும் எனவும், டிக்கெட்டுகள் மதியம் 1 ஆம் தேதி 2 மணி முதல் 9 டிக்கெட் வழங்குமிடத்தில் பெறலாம் எனத் தெரிவித்துள்ளது.

மேலும், வைகுண்ட ஏகாதசி மற்றும் ஆங்கில புத்தாண்டை ஒட்டி இன்றில் இருந்து 11 ஆம் தேதி வரை 25 சிறப்பு பேருந்துகள் திருப்பதி- திருமலை இடையே இயக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.