வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 31 டிசம்பர் 2022 (19:31 IST)

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணையில் திடீர் மாற்றம்!

2023ம் ஆண்டு நடைபெறும் சிபிஎஸ்சி பொதுத்தேர்வு தேதி குறித்த அறிவிப்பு   நேற்று வெளியான நிலையில், இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகள் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதன்படி, வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி  நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் வரும் மார்ச் 27 அம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன.
இந்த மாற்றம் ஜே.இ.இ மெயின் தேர்வுகள் மாணவர்கள் எழுதும் வகையில் மாற்றப்பட்டுள்ளதாகவும்,  ஒரே நாளில் இரண்டு தேர்வுகள் நடத்துவதை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக  சிபிஎஸ்இ நிர்வாகம் தெரித்துள்ளது,.
 

இத்தேர்வுகள் குறித்த தேதியில், 10:30 மணிக்கு தொடங்கும் என்றும் 01.30 வரை தேர்வு நடைபெறும் எனவும் இதற்காக செய்முறைத் தேர்வுகள் வரும் ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது,

இந்த தேர்வு குறித்து மேலும் விபரங்கள் பெற cbse.gov.in, cbse.nic.in ஆகிய இணையதளங்களை தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது,