செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 17 ஜூன் 2021 (20:34 IST)

தமிழக கொரோனா பாதிப்பு: ஏப்ரல் 17க்கு பின் ஜூன் 17 தான்!

சரியாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் அதாவது ஏப்ரல் 17ஆம் தேதி 10 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று தான் மீண்டும் பத்தாயிரத்துக்கு குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த இரண்டு மாதங்களில் தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் இருந்து வந்த நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து இன்று 60 நாட்களுக்குப் பின் மீண்டும் பத்தாயிரத்துக்கு குறைவான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதேபோல் படிப்படியாக குறைந்து தமிழகம் கொரோனாவில் இருந்து மீண்டு, கொரோனா இல்லாத ஒரு மாநிலமாக மாறுமமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த நிலையில் தமிழகத்தின் 5 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் பின்வருமாறு:
 
கோவை - 1,227
ஈரோடு - 1,041
சேலம் - 598
சென்னை - 559
திருப்பூர் - 542