புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 21 ஜனவரி 2022 (18:21 IST)

சுண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன...?

சித்த மருத்துவத்தில் சுண்டைக்காயின் பயன்பாடு அதிகம். பல மருந்து தயாரிப்பிற்கும் இதனை பயன்படுத்துகிறார்கள்.


இதில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் அதிக அளவிலும், தயாமின், ரிபோஃப்ளேவின் போன்ற சத்துக்களும் அதிக அளவில் காணப்படுகிறது.

சுண்டைக்காய் சற்று உஷ்ண தன்மை கொண்ட ஒரு காய் வகையாகும். ஜலதோஷம் அல்லது சளி பாதிப்புகள் ஏற்பட்டவர்கள் பிஞ்சு சுண்டைக்காயைச் சமைத்து சுண்டைக்காய் காரக்குழம்பு செய்து சுண்டைக்காயைச் வந்தால் சாப்பிட்டு வந்தால் தொண்டை, நெஞ்சில் ஏற்படும் சளிக்கட்டு குறையும்.

சுண்டைக்காயினை மாதம் இருமுறை உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்றில் உள்ள புழு பூச்சிகள் அழிந்துவிடும்.

கண்ட நேரங்களில் அதிகம் சாப்பிடுவது, எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளை இரவில் அதிகம் சாப்பிடுவது போன்ற காரணங்களால் சிலருக்கு அஜீரணக்கோளாறு ஏற்படக்கூடும். அஜீரண கோளாறு உள்ளவர்கள் ஒரு டம்ளர் மோரில் இரண்டு சிட்டிகை சுண்டைக்காய் வற்றல் தூளை சேர்த்து பகலில் குடித்து வந்தால் குணமாகும்.

சுண்டைக்காய் வத்தலை மிக்ஸியில் போட்டு அரைத்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து கொடுத்தால் வயிற்றுப் பூச்சிகள் அழிந்து குடல் மற்றும் வயிறு சுத்தமாகும்.

முக்கியமாக வயிறு சம்பந்தமான பிரச்சனைகளும் வராது.சுண்டைக்காய் வத்தல் சாப்பிட்டால் தேவையற்ற கொழுப்புகள் கரைவது மட்டுமில்லாமல் வயிற்றில் இருக்கும் தேவையற்ற கசடுகளையும் நீக்கிவிடும்.

வாரத்தில் ஏதேனும் மூன்று நாட்கள் சுண்டைக்காய் சாப்பிட்டு வர வயற்றில் உள்ள கிருமி, மூலக் கிருமிகள் நீங்கும்.மேலும் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.