1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 14 மே 2022 (12:18 IST)

சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !!

Turkey Berry
சுண்டைக்காயில் கால்சியம் சத்து சற்று அதிகம் உள்ளது. எனவே சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் உறுதியடையும்.


எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் அஜீரணம் ஏற்படுகிறது. சுண்டை வற்றல் தூள், 2 சிட்டிகை அளவு, 1 டம்ளர் மோரில் கலந்து பகலில் மட்டும் குடித்து வந்தால் அஜீரண பிரச்சனை விரைவில் நீங்கும்.

கடுமையான மலச்சிக்கலே மூலம் நோய் வருவதற்கு பிரதான காரணமாக இருக்கிறது. அதேபோல் அதீத உடல் உஷ்ணம் மற்றும் அதிக அளவு கார உணவுகள் சாப்பிடுவதாலும் மூலம் உருவாகிறது. இளம் சுண்டைக்காய்களை மிதமான காரம் சேர்த்து குழம்பு வைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வருவதன் மூலம் பிரச்சனை விரைவில் நீங்கும்.

நாம் சாப்பிடுவது, குடிப்பது, அருந்துவது என அனைத்து பொருள்களிலும் கண்ணுக்கு தெரியாத மாசுகள் நிறைந்துள்ளன. நாளடைவில் இவை இரத்தத்தில் கலந்து உடல்நலத்திற்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே சுண்டக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இரத்தத்தில் இருக்கும் நச்சுகள் நீங்கி இரத்தம் சுத்தமாகும்.

உடல்நலம் சரியில்லாத சமயங்களில் பலருக்கும் நாக்கில் உணவின் சுவை அறியும் திறன் சற்று குறைந்து விடுகிறது. இவர்கள் தினமும் சிறிதளவு சுண்டக்காயை பக்குவப்படுத்தி சாப்பிடுவதால் நாக்கில் சுவை அறியும் திறன் மீண்டும் அதிகரிக்கும். எச்சிலை நன்கு சுரக்க செய்து செரிமானத்தை மேம்படுத்தும்.

ஜலதோஷம் மற்றும் சளி பிடித்த காலத்தில் சிலருக்கு குரல் கட்டிக்கொண்டு சரியாக பேச முடியாமல் போகிறது. சிலருக்கு வேறு சில காரணங்களால் குரல் வளம் குறைகிறது.