செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (20:11 IST)

சேற்றில் சிக்கிய டிராக்டர்… தலைகுப்புற விழுந்த விவசாயி பலி

ஆந்திர மாநிலம் கடப்பா அருகேயுள்ள வென்சுர்லா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் கர்ணா. இவர் ஒரு விவசாயி ஆவார்.

இவர் தனது நிலத்தில் டிராக்டர் மூலம் விவசாயப் பணிகள் மேற்கொண்டு வந்தார்.

அப்போது எதிர்பாரத விதமாக டிராக்டர் சேற்றில் சிக்கிக்கொண்டது.  அங்கிருந்த சக விவசாயிகள் மூலம் அவர் டிராக்டரை வெளியே எடுக்க முயற்சி செய்தார்.

இதில்,  கர்ணா டிராக்டரில் இருந்த ஆக்சிலேட்டரை அழுத்திவிட்ட டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்துவிட்டது.

இதில் டிராக்டருக்கு அடியில் சிக்கிக்கொண்ட கர்ணா சம்பவ இடத்திலேயே  பலியானர்.
இதுகுறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிறது.