வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 30 ஜூலை 2020 (17:09 IST)

கொரோனா பாதிப்பில் 4வது இடத்திற்கு நகர்ந்தது தமிழகம்: 3வது இடத்தில் எந்த மாநிலம்?

கடந்த சில வாரங்களாக இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது நான்காவது இடத்திற்கு நகர்ந்துள்ளது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது 
 
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் மகாராஷ்டிராவும், இரண்டாவது இடத்தில் கர்நாடகமும் இருந்தது. இதனை அடுத்து தமிழகம் மூன்றாவது இடத்தில் இருந்த நிலையில் தற்போது தமிழகத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆந்திரா மாநிலம் மூன்றாவது இடத்திற்கு சென்று உள்ளதால் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது
 
தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசின் சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி, மாநகராட்சி நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாகவே தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஆந்திராவில் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர் என்பதும், அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தலைவிரித்து ஆடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் 1,46,433 பேர்களும், கர்நாடகாவில் 67,456 பேர்களும், ஆந்திராவில் 63,771 பேர்களும், தமிழகத்தில் 57,490 பேர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது