வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 30 ஜூலை 2020 (19:41 IST)

ஆந்திராவில் இன்றும் 10 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு: பொதுமக்கள் அதிர்ச்சி

ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில் நேற்று முதல் முறையாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதனால் தமிழகத்தை நான்காவது இடத்திற்கு பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியாவிலேயே அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மூன்றாவது இடத்தை ஆந்திரா பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்றும் இரண்டாவது நாளாக 10,000க்கும் அதிகமானோர் ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று ஆந்திராவில் 10,167 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 130,557ஆக உயர்ந்துள்ளதாகவும் ஆந்திர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
இன்று மட்டும் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4618 என்றும் இதனை அடுத்து மொத்தம் 57,148 பேர் கொரோனாவால் இருந்து குணம் அடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆந்திர அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று மட்டும் ஆந்திராவில் 70 ஆயிரத்து 68 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது