வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 19 ஜூலை 2023 (08:04 IST)

மக்களவை தேர்தலில் 330 இடங்களில் பாஜக கூட்டணி வெல்லும்: டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 330 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்று டெல்லியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். 
 
டெல்லியில் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக உள்பட 38 கட்சிகள் கலந்து கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தல் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகவும் எதிர்கட்சிகளின் வியூகத்தை முறியடிக்க திட்டமிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களவைத் தேர்தலில் 330 இடங்களில் பாஜக கூட்டணி வெல்லும் என்று தெரிவித்தார். 
 
மேலும் உலக அளவில் இந்தியாவின் பெருமையை பிரதமர் மோடி உயர்த்தி உள்ளார் என்றும் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிக அளவில் இருந்த போதும் இந்தியாவில் பாதிப்பை குறைக்கும் வகையில் பிரதமர் மோடி செயல்பட்டார் என்றும் புகழாரம் சூட்டினார்...
 
Edited by Siva