வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 19 ஆகஸ்ட் 2020 (17:49 IST)

நேரு குடும்பத்தை சாராதவருக்கு காங்கிரஸ் தலைவர்: ப.சிதம்பரத்திற்கு வாய்ப்பா?

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் வரவேண்டும் என பிரியங்க காந்தி திடீரென ஒரு கருத்தை தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, என பெரும்பாலும் நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களே காங்கிரஸ் தலைவர்களாக இருந்து வருகின்றனர். காமராஜர் உள்ளிட்ட ஒரு சிலர் காங்கிரஸ் தலைவர்களாக இருந்தாலும் காங்கிரஸ் கட்சியில் நேரு குடும்பத்தின் ஆதிக்கம்தான் அதிகளவில் உள்ளது
 
இந்த நிலையில் திடீரென பிரியங்கா காந்தி எங்கள் குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக வரவேண்டும் என தெரிவித்ததும் பல பழம்பெரும் காங்கிரஸ் தலைவர்கள் தங்களுக்கு அந்த பதவி கிடைக்கும் என்ற எண்ணத்தில் இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மூத்த காங்கிரஸ் தலைவரான ப சிதம்பரம் பெயர் அடிபடுவதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. மத்திய நிதி அமைச்சராக இருந்தவர், ஆளுமை உடையவர், மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர், இந்தியா முழுவதும் தெரிந்த முகம் போன்றவை ப சிதம்பரத்திற்கு பாசிட்டிவ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் கேரளாவைச் சேர்ந்த ஏகே ஆண்டனி, கர்நாடகாவைச் சேர்ந்த மல்லிகார்ஜூனே உள்பட ஒரு சிலரின் பெயர்கள் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அடிபடிவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காமராஜரை அடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியை மீண்டும் ஒருமுறை ஒரு தமிழருக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து