திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sva

இன்றுடன் ஓய்வு பெறுகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: காந்தி சமாதியில் மரியாதை!

ramnath
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் இன்றுடன் ஓய்வு பெற இருப்பதை அடுத்து அவர் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்துள்ளார் 
 
இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. இந்தியாவின் ஜனாதிபதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் நாள் ராம்நாத் கோவிந்த் அவர்கள் பதவியேற்றார் 
 
அவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. அதாவது இன்றுடன் அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளதை அடுத்து அவர் மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்களின் சமாதியில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்துள்ளார்
 
நாளை புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள திரவுபதி முர்மு அவர்கள் பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது