1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 21 ஜூலை 2022 (20:21 IST)

குடியரசு தலைவர் ஆகிறார் திரெளபதி முர்மு: 70% வாக்குகள் பெற்று முன்னிலை

draupathi vs yashvandh
குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 11 மணி முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் ஆரம்பம் முதலே பாஜக கூட்டணி கட்சியின் வேட்பாளர்  திரெளபதி முர்மு முன்னிலையில் இருந்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மூன்றாம் சுற்று முடிவில்  திரெளபதி முர்மு 70 சதவீத வாக்குகளை பெற்று உள்ளதால் இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதி ஆகி விட்டதாக கூறப்படுகிறது.
 
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு 3ம் சுற்று முடிவில் முர்மு 2,161 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா 1,058 வாக்குகளும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.