திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

15வது குடியரசு தலைவராக திரெளபதி முர்மு இன்று பதவியேற்பு: முக்கிய தலைவர்கள் பங்கேற்பு!

draupati murmu
நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக இன்று திரெளபதி முர்மு அவர்கள் பதவி ஏற்க உள்ளதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 
 
மீபத்தில் நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி கட்சியின் வேட்பாளர் திரவுபதி முர்மு மாபெரும் வெற்றி பெற்றார்
 
இதனையடுத்து இன்று இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக அவர் பதவி ஏற்கிறார். நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இன்று பதவி ஏற்பு விழா நடைபெறுவதாகவும் இந்த பதவியேற்பு விழாவிற்கு நாடு முழுவதிலும் இருந்து முக்கிய தலைவர்கள் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்திய குடியரசுத் தலைவர் இன்று பதவியேற்க உள்ளதை அடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது