தொடர்புடைய செய்திகள்
- இது கொரோனா 4வது அலை இல்லை..! – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் உறுதி!
- இந்தியாவை வறுத்தெடுக்கும் வெயில்! – மாநில அரசுகளை எச்சரிக்கும் மத்திய அரசு!
- 3 நாள் ஐரோப்பா பயணம், 25 நிகழ்ச்சிகள்..! – புறப்பட்டார் பிரதமர் மோடி!
- 51.35 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- தமிழகத்தில் மீண்டும் குறைய ஆரம்பித்த கொரோனா பாதிப்பு!
தொடர்ந்து 3 ஆயிரத்திற்கும் மேல் தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கோரொனா!
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் வெகுவாக குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியது. முன்னதாக ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் தற்போது அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 3,157 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,30,82,345 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,23,869 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,25,38,976 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 19500 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
