3 நாள் ஐரோப்பா பயணம், 25 நிகழ்ச்சிகள்..! – புறப்பட்டார் பிரதமர் மோடி!
பல்வேறு நாடுகளிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வரும் நிலையில் ஐரோப்பிய நாடுகளுடனான பொருளாதார உறவை மேம்படுத்துவதற்காக பிரதமர் மோடி ஐரோப்பா புறப்படுகிறார்.
கொரோனாவுக்கு பிந்தைய காலம் மற்றும் ரஷ்யா – உக்ரைன் போர் ஆகியவற்றால் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பல்வேறு நாடுகளும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்தியாவிலும் இந்த நிலை உள்ளது.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளுக்கு தனது சுற்றுபயணத்தை தொடங்குகிறார். இந்த பயணத்தில் 3 நாட்களில் 25 நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ள உள்ளார்.
இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஐரோப்பா பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நிலையில் எனது ஐரோப்பிய பயணம் அமைந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுடன் ஒத்துழைப்பு உணர்வை வலுப்படுத்த விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்