1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Today corona cases in India

ஒரே நாளில் 33 ஆயிரம் பேருக்கு கொரோனா – அதிர்ச்சியளிக்கும் இந்திய நிலவரம்!

India
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில மாதங்களில் வேகமாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. சமீபகாலமாக 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 33,750 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,48,95,329 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 123 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  4,81,893 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,42,95,407 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 1,45,582 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ஆகிறாரா உதயநிதி?