தொடர்புடைய செய்திகள்
- மாநிலங்களவை 8 எம்.பி.க்கள் நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ்!!
- சமாதானத்திற்கு கொண்டு வரப்பட்ட டீ.. மறுத்த சஸ்பெண்ட் எம்.பி.க்கள்!!
- விடிய விடிய போராட்டம்; பாராளுமன்ற வளாகத்தில் கூடாரம் போட்ட எம்.பிக்கள்!
- சூர்யா உருவ படத்தை எரித்து இந்து முன்னணியினர் போராட்டம் !
- எம்.பிக்கள் உள்ளிருப்பு போராட்டம்; சாலைகளில் மக்கள் போராட்டம்! – பரபரப்பை ஏற்படுத்தும் விவசாய மசோதா!
இன்று நாடு முழுவதும் பாரத் பந்த்: பல மாநிலங்கள் ஸ்தம்பிக்க வாய்ப்பு
இன்று நாடு முழுவதும் பாரத் பந்த்: பல மாநிலங்கள் ஸ்தம்பிக்க வாய்ப்பு
சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பாரத் பந்த் இன்று நடைபெற்று வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
நாடு முழுவதும் வேளாண்மை மசோதாவை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள முக்கிய பகுதிகளில் சாலை போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து முடங்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
குறிப்பாக ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வேளாண் மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு விவசாயிகளிடையே கிளம்பியுள்ளது. விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது
விவசாயிகள் அமைப்பு அறிவித்துள்ள இந்த போராட்டத்திற்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. குறிப்பாக காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ், இடதுசாரிகள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த பாரத் பந்த்துக்கு ஆதரவு அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
