திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (07:52 IST)

உலகில் கொரோனா பாதிப்பு: 3.23 கோடியாக அதிகரிப்பு

உலகில் கொரோனா தொற்றால் 3,23,94,830 பேர் பாதிக்கப்பபட்டுள்ளனர் என்றும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 987,066 பேர் இதுவரை பலியாகி உள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகம் முழுவதும் 2,39,04,687 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 7,185,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 207,538 பேர் பலியாகி உள்ளனர் என்றும் அமெரிக்காவில் கொரோனா தொற்றில் இருந்து 4,437,575 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
பிரேசிலில் கொரோனா தொற்றால் 46,59,909 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், பிரேசிலில் கொரோனா தொற்றால் இதுவரை 139,883 பேர் பலியாகி உள்ளனர் என்பதும், பிரேசிலில் நேற்று ஒரு நாளில் மட்டும் 818 பேர் பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 32,129 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் கொரோனா தொற்றால் 1,128,836 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் புதிதாக 6,595 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் 19,948 பேர் பலியாகி உள்ளனர் 
 
இந்தியாவில் கொரோனா தொற்றால் 5,816,103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இந்தியாவில் கொரோனா தொற்றால் 92,317 பேர் பலியாகி உள்ளனர் என்றும் இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து 4,752,991 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது