1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Today also share market sensex down

தொடர்ந்து 2வது நாளாகவும் சரிந்தது பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

Share Market
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று வாரத்தின் முதல் நாள் 400 புள்ளிகளுக்கும் மேல் சென்செக்ஸ் சரிந்தது என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் இன்று வாரத்தின் இரண்டாவது நாளிலும் பங்குச்சந்தை சரிந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
பங்கு சந்தை சற்று முன் ஆரம்பித்த நிலையில் ஆரம்பத்திலேயே 300 புள்ளிகள் சரிந்துள்ளது. இதனை அடுத்து 58650 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 90 ஐந்து புள்ளிகள் சரிந்து 17 ஆயிரத்து 580 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் பங்குச்சந்தை சரிந்தது முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
அடுத்த கட்டுரையில்
இன்று தங்கம் வெள்ளி விலை உயர்வு: சென்னை நிலவரம்!