வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (17:58 IST)

திரையரங்குகளில் அதிக விலையில் உணவுப்பொருள் விற்பனை: தொழிலாளர் துறை எச்சரிக்கை

காலங்காலமாக திரையரங்குகளில் உணவுப்பொருட்களில் விலை பலமடங்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளியே பத்து ரூபாய்க்கு கிடைக்கும் காபி, பாப்கார்ன் ஆகியவை 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை திரையரங்குகளில் விற்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் திரையரங்குகளில் விற்கப்படும் பொட்டலமிடப்பட்ட உணவுப்பொருட்களை எம்ஆர்பி-க்கு அதிகமாக விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என  தொழிலாளர் துறை எச்சரித்துள்ளது.

அதேபோல் பேருந்து, ரயில்நிலையங்கள், ஓட்டல்கள், பல்பொருள் அங்காடிகளில் கூடுதல் விலைக்கு விற்க கூடாது என்றும் சாலையோர உணவகங்கள் போன்ற இடங்களிலும் கூடுதல் விலைக்கு உணவு பொருட்களை விற்பனை செய்ய கூடாது என்றும் அதையும் மீறி விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொழிலாளர் துறை அறிவித்துள்ளது.

மேலும் பெட்ரோல், டீசல் பங்க்குகளில் அளவு குறைவாக விற்பனை செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.