இன்று மாலை சூரிய கிரகணம்: வெறும் கண்களால் பார்க்கக்கூடாது என எச்சரிக்கை!
இன்று இந்தியாவில் சூரிய கிரகணம் நிகழ இருப்பதை அடுத்து சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று மாலை சூரிய கிரகணம் ஏற்படுகிறது என்றும் இதை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் சென்னையை பொருத்தவரை சூரிய கிரகணத்தை பார்ப்பதற்காக பிர்லா கோளரங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் மற்றும் சூரிய கிரகணத்தை பார்க்க ஆர்வம் உள்ள பொதுமக்கள் இலவசமாக வந்து சூரிய கிரகணத்தை பார்த்துக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
சூரிய கிரகணம் காரணமாக இன்று காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்படுகிறது என திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva