புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 11 ஜூலை 2020 (12:53 IST)

ஒரே மாதத்தில் ரூ.15.80 கோடி காணிக்கை: கல்லா கட்டிய ஏழுமலையான்!!

ஒரு மாதத்தில் உண்டியலில் ரூ.15.80 கோடி காணிக்கை திருப்பதியில் செலுத்தியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 75 நாட்களுக்கு மேலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து ஜூன் எட்டாம் தேதி முதல் திருப்பதி திறக்கப்பட்டது.   
 
முதல் ஒரு சில நாட்களுக்கு பிறகு பக்கதர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையும் கணிசமாக உயர்த்தப்பட்டது. அதன் படி ஒரு நாளைக்கு 6,000 பக்தர்கள் என தொடங்கி தற்போது 12,500  பக்தர்கள் வரை தினந்தோறும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
 
தரிசனம் மீண்டும் தொடங்கப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில் கடந்த ஒரு மாதத்தில் 2 லட்சத்து 63 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த ஒரு மாதத்தில் உண்டியலில் ரூ.15.80 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.