கொரோனா ஹாட் ஸ்பாட் ஆன திருப்பதி!
திருப்பதியில் சுமார் 60 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 75 நாட்களுக்கு மேலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து ஜூன் எட்டாம் தேதி முதல் திருப்பதி திறக்கப்பட்டது.
முதல் ஒரு வாரத்திற்கு பிறகு பக்கதர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையும் கணிசமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தற்போது திருப்பதி மலையில் வேலை செய்யும் தேவஸ்தான ஊழியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் ஆகியோர் உட்பட சுமார் 60 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எனவே, திருப்பதி மலையில் வேலை செய்யும் தேவஸ்தான பணியாளர்கள் அனைவருக்கும் விரைவாக கொரோனா பரிசோதனை நடத்த தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.